• September 19, 2019
0 Comments

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து மத்திய அரசு, அதனைத்தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அந்த மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட சில தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ம.தி.மு.க. சார்பில் வரும் 15ந்தேதி அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளார்.   ஆனால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லாத நிலை உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார்  மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் வைகோவின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் . வழக்கை எப்பொழுது விசாரிப்பது என தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று ரமணா அமர்வு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *