• September 19, 2019
0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார் நடிகை ரித்விகா. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் ‘மெட்ராஸ்’ படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன்.

ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஒருநாள் கமல் சாரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போ ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *