• September 19, 2019
0 Comments

டெஸ்ட் போட்டியில்  ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க அணி நிர்வாகம் விரும்பியதில்லை.இதனால் வாய்ப்பு கிடைக்கும்போது  5-வது அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கினார்.தற்போது ரகானே, ஹனுமா விஹாரி அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவன் அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *