• September 19, 2019
0 Comments

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக தண்டனை பெற்று வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதம் பரோல் கேட்ட நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கிய நீதிமன்றம், ஜூலை மாதம் 25-ந் தேதி பரோல் வழங்கியது.

இதனையடுத்து சிறையிலிருந்து வெளியெ வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இதனையடுத்து பரோலில் வெளியே உள்ள நளினி ஏற்கனவெ ஒருமுறை பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில், தற்போது தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் பரோலை 2-வது முறையாக நீட்டிக்க மறுத்து நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து நளினியின் பரோல் வரும் 15-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *