• September 19, 2019
0 Comments

நெல்லை,

நெல்லை நேதாஜி போஸ் மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் வைத்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தரவும், புதிய மார்க்கெட் கட்டிய பிறகு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து எந்த முடிவும் அறிவிக்காத நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தற்போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், இந்த முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் பல வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு  மற்றும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *