• September 18, 2019
0 Comments

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தாராபுரம் ரோடு பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணன் என்பவர் தனது தனது பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் ரோடு பகுதி வழியாக வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதி, கிருஷ்ணன் மற்றும் குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போது, வழியிலே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *