• September 18, 2019
0 Comments

ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்த மலர்வண்ணன் என்பவரது மனைவி நிர்மலா ஆவார். இவர்களுக்கு ஹரிதா என்ற மகள் உள்ளார். கணவர் இறந்து விட்டதால் நிர்மலா கூலிவேலைக்கு சென்று மகளை தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தார். மிகவும் வறுமையின் காரணமாக விரக்தியில் இருந்த அவர், மகளை துப்பட்டாவால் உடலில் கட்டிக்கொண்டு ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவர்களது உடல் மிதப்பதை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *