• September 19, 2019
0 Comments

இலங்கையில் அடுத்த சில தினங்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *