• September 18, 2019
0 Comments

“இறைவன் ஒருவரே, உலகம் ஒரு குடும்பம்” என்ற தலைப்பில் மதத் தலைவர்களின் ஆன்மீக மாநாடு மற்றும் அவர்களை கவுரவிக்கும் விழாவினை பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் நடத்த உள்ளனர். ஞாயிறு காலை நடைபெற உள்ள இந்த விழாவில், பிரம்மா குமாரி உஷா பென் துவக்க உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவுள்ளார். இதில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் கலந்து கொள்பவர்கள் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் கிளை நிலையங்களிலோ அல்லது http://www/happy-village.org/Register.html என்ற வலைத்தளத்திலோ முன்பதிவு செய்து கலந்து கொள்ள வேண்டும்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *