• September 19, 2019
0 Comments

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஏர்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் அவ்வப்போது விலங்குகள் வந்து அங்குள்ள அனைத்தையும் நாசம் செய்கின்றன. தற்போது, நேற்று மாலை திடீரென மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று, சாலையில் அங்கும் இங்கும் ஓடி பின், ஒரு மரத்தில் ஏறி நின்றது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேர முயற்சிக்குப்பின் கரடி காட்டுக்குள் சென்றது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *