• September 18, 2019
0 Comments

நெல்லை டவுனில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நேதாஜி போஸ் மார்க்கெட்டில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கடை நடத்தும் வியாபாரிகள் மாதந்தோறும் நெல்லை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். தற்போது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் போஸ் மார்க்கெட் புதிதாக கட்டப்பட உள்ளதால், அங்குள்ள மாநகராட்சி சார்பாக தற்போது செயல்பட்டு வரும் அனைத்து கடைகளையும் காலி செய்ய வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு மார்க்கெட் வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, மார்க்கெட் நுழைவு வாயில் பாதையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *