• September 18, 2019
0 Comments

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 8-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தீபக் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 41 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே பாட்னாவை வீழ்த்தி இருந்தது. இதனால் மீண்டும் தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. பாட்னா பைரேட்ஸ் 4 வெற்றி, 10 தோல்வியுடன் 25 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி ஜெய்ப்பூருக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *