• September 18, 2019
0 Comments

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ந்தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக கொள்ளிடத்துக்கு வந்தடைகிறது. தற்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், கொள்ளிட ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை. வீணாக கடலில் கலப்பதால், அங்குள்ள விவசாயிகள் வேதனையுடன் இருக்கின்றனர். காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில் ஆற்றின் குறுக்கே மண் போட்டு தண்ணீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், தண்ணீர் கடைமடை வரை செல்லாமல் கடலில் வீணாக கலக்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டி தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *