• September 19, 2019
0 Comments

2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை ஆவார். மேரிகோம் ஏற்கனவே பத்மபூ‌ஷன் விருதை 2013-ம் ஆண்டும், பத்மஸ்ரீ விருதை 2006-ம் ஆண்டும் பெற்று இருந்தார். பத்மவிபூ‌ஷன் விருதை பெற இருக்கும் 4-வது விளையாட்டு நபர் என்ற பெருமையை மேரிகோம் பெறுவார்.

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு மேரிகோமை பாராளுமன்ற மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக பா.ஜனதா அரசு நியமித்தது. உலக பேட்மிண்டன் போட்டியில் சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த பி.வி.சிந்து பத்மபூ‌ஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது நாட்டில் வழங்கப்படும் 3-வது உயரிய விருது ஆகும். மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு வினிஷ்போகத் (மல்யுத்தம்), ஹர்மன்பிரீத் கவூர் (கிரிக்கெட்) ரணிராம்பால் (ஆக்கி), சுமாஷிரு (துப்பாக்கி சுடுதல்), மணிக்கா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தஷி மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்) ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *