• September 19, 2019
0 Comments

தஞ்சை திருவள்ளுவர் தெரு கிருஷ்ணா நகரை சேர்ந்த கோபு என்பவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபிரகாம் பண்டிதர் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு பின், வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ ஒருவர் திருடியிருப்பது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை திருடியது தஞ்சை கரந்தையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *