• September 23, 2019
0 Comments

தஞ்சாவூர் ரங்கநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலர்மன்னன் என்ற வாலிபர் கடந்த 10-ந் தேதி நாகை அடுத்த வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அருகில் இருந்த சுற்றுலா தலமான நாகூருக்கு சென்ற போது, மது அருந்துவதற்கு அவர் தனது அண்ணனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால், மனமுடைந்த மலர்மன்னன் அருகில் இருந்த கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டுஅரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *