• September 23, 2019
0 Comments

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் என்பவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி கடைகள் மற்றும் விசே‌ஷ இடங்களுக்கு சென்று சமையல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 1வது பிளாட் பாரத்தில் அவர் மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட போது, அருகில் இருந்த ஒருவர், அவரை பிடித்து தள்ளி விட்டார். இதனால், டேவிட் பிளாட்பாரத்தை விட்டு கீழே விழுந்த போது, அங்கு வந்த பஸ் ஒன்று அவர் மீது ஏறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேவிட்டை தள்ளிவிட்ட மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் தேனி மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிங்காரவேலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *