• September 18, 2019
0 Comments

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 53,437 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் வைட் / பிளாக் என டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட அழகாக காட்சியளிக்கிறது. புதிய நிறம் தவிர ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் இடம்பெற்றிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் AHO (ஆட்டோ ஹெட்லைட் ஆன்), ஹனிகாம்ப் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட சைடு பேனல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர், அலுமினியம் கிராப் ரெயில்கள், பிளாக் நிற அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட்கள் இடம்பெற்றிருக்கின்றன. டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலிலும் முந்தைய வெர்ஷனை போன்று 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *