• September 18, 2019
0 Comments

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் என்பவரது மகன் மணிகண்டன், கடந்த 2010-ம் ஆண்டு திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் பைக்கில் சென்றபோது மாநகர பஸ் மோதி உயிரிழந்தார். இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சத்து 4000 வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். ஆனால், மாநகர போக்குவரத்து நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வில்லை. இதனால், வட்டியுடன் சேர்த்து ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 101 ரூபாய் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2-ந்தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், மாநகர போக்குவரத்து நிர்வாகம் எந்த இழப்பீட்டு தொகையும் வழங்காததால், இன்று திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வந்த மாநகர பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *