• September 18, 2019
0 Comments

டொயோட்டா இந்தியா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் ஜி-ஆப்ஷனல் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 9.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ஜி-ஆப்ஷனல் எனும் புதிய வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய ஆப்ஷனல் மாடல்களை போன்றே புதிய ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில் மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் சி.வி.டி. ஆப்ஷன் விலை ரூ. 10.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய யாரிஸ் ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், குரோம் கிரில், ORVMகள், 15-இன்ச் சில்வர் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், 3 ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு சி.வி.டி.-ஐ ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *