• September 18, 2019
0 Comments

மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த ‘ஓமன் ஏர்’ என்ற விமானத்தில் தான்சானியா நாட்டைச்சேர்ந்த செல்மெனி கெனி பாண்ட் என்ற பெண் பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், விமானம் சென்னையில் தரை இறங்கியதும், மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அவரை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *