• September 18, 2019
0 Comments

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தினமும் பஸ்சில் சென்று படித்து வந்தார். அப்போது அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர், அந்த மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து, அதனை அந்த மாணவியிடம் காண்பித்து மிரட்டி பலாத்காரம் செய்தனர். இதுப்பற்றி அந்த மாணவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உறவினர்களுடன் புகார் கொடுக்க வந்த போது, போலீசார் அதனை வாங்காமல் விரட்டி விட்டனர். இதனால், அந்த மாணவி இன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து உயர்அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கல்லூரி பஸ் டிரைவர் ஒருவர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டதும், அவர்கள் இதுபோல், 5-க்கும் மேற்பட்டோரை வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்து, அதன் மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *