• September 18, 2019
0 Comments

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு திப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும், பலவன் சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில், தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில், புதுமாப்பிள்ளை ரவி திடீரென எங்கோ ஓடிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளை ரவி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் தாலி கட்ட மறுத்து வந்து விட்டதாக போலீசாரிடம் கூறினார். பின்னர் அங்கு வந்த இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *