• September 19, 2019
0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஜி.பி.எஸ். மாடல் விலை ரூ. 40,990 என்றும் செல்லுலார் மாடலுக்கு ரூ. 49,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *