• September 19, 2019
0 Comments

தலைநகர் கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர சேவை அதிவேக ரயில் நேற்று பிற்பகல் தனது பயணத்தை துவங்கியது . இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் வரை பயணித்தார். நாள்தோறும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த ரயில் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும். மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் ரயில் முற்பகல் 9.06 க்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *