• September 18, 2019
0 Comments

2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா என்ற பெண் ஒரு பார்க்கிங்கில் மைக்கேலை சந்தித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் 16 மற்றும் 17. சில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. மைக்கேலை காதலித்த நினா முதல் 6 ஆண்டுகள் வரை கடிதம் மூலம் மட்டுமே காதலித்து வந்தார். அதன் பின், 2012 -ம் ஆண்டு சிறையில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். இந்த காதல் விஷயம் அவரது அவரது தாய் மற்றும் நெருங்கிய தோழிக்கு மட்டுமே தெரியும். மைக்கேல் தனது திருமண விருப்பத்தை கூறியவுடன், நினா உடனே சம்மதித்தார். 6 வருட காத்திருப்புக்கு பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட பின், அவர்களுக்கு சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது. மேலும், மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. சமூகவலைதளத்தில் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை குறித்து அப்டேட் செய்து, மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *