• September 19, 2019
0 Comments

இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19-ந் தேதியும் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *