• October 19, 2019
0 Comments

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு புறப்பட்ட போது, ஒரு தரப்பு மீனவர்கள் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை, ” நீங்கள் எல்லை தாண்டி வந்திருக்கிறீர்கள். இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே திரும்பி செல்லுங்கள் ” என்று கூறி எச்சரித்தனர். இதனால் மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரான போது, இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களின் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தி, அவர்கள் வைத்திருந்த டன் கணக்கிலான மீன்களையும் பறிமுதல் செய்து, விரட்டியடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படை அதிகாரிகள் ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *