• September 19, 2019
0 Comments

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 103 இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய கோப்பை சாம்பியனும், 62-வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொண்டது. கத்தாருக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடப்பு ஆசிய சாம்பியான கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புள்ளி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தில் சில விஷயங்களில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். நமது அணி வீரர்களுக்கு மட்டுமின்றி கத்தார் அணி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இரண்டு அணியின் கோல் எல்லை பகுதிகளிலும் பந்து பலமுறை வலம் வந்தது விறுவிறுப்பாக இருந்தது. இந்த ஆட்டம் எங்களுக்கு சிறந்த அனுபவமாகும். நமது அணி வீரர்கள் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது.

கத்தார் அணி கோல் அடிக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கியது. நமது அணியும் கோல் அடிக்க பல வாய்ப்புகளை ஏற்படுத்தியது. நாங்கள் உடல்தகுதி நிறைந்த அணி என்பதை இந்த ஆட்டத்தில் நிரூபித்து இருக்கிறோம். அணியில் உடல் தகுதி பிரச்சினை இருப்பதாக விமர்சிப்பதில் உண்மையில்லை. கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் நமது வீரர்கள் கடைசி நிமிடம் வரை விரைவாக விளையாடினார்கள். கொல்கத்தாவில் நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் 80 ஆயிரம் ரசிகர்களாவது வர வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *