• September 19, 2019
0 Comments

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 103 இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய கோப்பை சாம்பியனும், 62-வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. டிரா செய்ததன் மூலம் இந்திய அணி ஒரு புள்ளியை பெற்றுள்ளது. காய்ச்சல் காரணமாக இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து கேப்டன் பொறுப்பை கவனித்தார். கோல்கீப்பிங்கில் அருமையாக செயல்பட்ட அவர் கத்தார் அணியினரின் கோல் அடிக்கும் முயற்சிகளை பலமுறை தடுத்து நிறுத்தினார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தரவரிசையில் 182-வது இடத்தில் உள்ள வங்காளதேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *