• September 19, 2019
0 Comments

இப்போது எந்தவொரு இடத்திலும், எத்தகைய வழிமுறைகளிலேனும் நடைபெறுகின்ற தீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் செப் 11 தாக்குதல்கள் நடைபெற்ற தினத்தில் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்திருக்கிறது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். எந்தவொரு இடத்திலும், எந்தவொரு வழிமுறைகளிலும் நடைபெறும் தீவிரவாதம் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். அமெரிக்காவில் நடைபெற்ற செப் 11 தாக்குதல்களிலும், இலங்கையில் நடை பெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூருகின்றோம்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *