• September 19, 2019
0 Comments

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில், 60 காட்டு யானைகள் வந்துள்ளதால், அவை வேறு பகுதிக்கு செல்லாதவாறு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு நடவு செய்துள்ள நெற்பயிர்கள் நாசமடைந்துவிட கூடாது என்பதற்காக 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்குள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே, யானைகள் தாக்கி பலர் இறந்துள்ளனர். மேலும் அவை பயிர்களை சேதப்படுத்தி விடும் என்பதாலும் அங்குள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *