• September 19, 2019
0 Comments

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் அங்குள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையிலிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியை சென்றடைகிறது. வீராணம் ஏரிக்கு இன்று 2,046 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் 47.02 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், சென்னை மக்களுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *