• September 19, 2019
0 Comments

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பரத் கிஷோர் என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தினேஷ் என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் காளப்பனஅள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். பின் அங்கிருந்து மாட்லாம்பட்டி திருமண மண்டபத்திற்காக சென்ற போது, ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர மின்வேலி மீது மோதி, அங்கேயே பரத் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அங்கு வந்து பலியான பரத் கிஷோரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *