• September 19, 2019
0 Comments

7-வது புரோ கபடி லீக் தொடரில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற 85-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் மோதின. தொடக்கத்தில் பெங்கால் அணி, மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் பெங்கால் அணி 16-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஆட்டத்தின் முடிவில் பெங்கால் அணி 29-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். 15-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *