• September 18, 2019
0 Comments

இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபரை மீண்டும் 7 நாட்கள் விசாரணை காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை (27) இரவு இந்த சந்தேக நபரை சிறப்பு அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைதுசெய்து கல்முனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்து இரு வாரங்கள் விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆஜர்படுத்தப்பட்ட இந்த நபர் தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத நிலையில் போலீசார் மேலும் ஒருவாரம் விசாரணை காவலை கோரியதற்கு ஏற்ப நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *