• September 18, 2019
0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, தன்னுடைய மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய ஒரு மாத கால பரோலில் வந்தார். அவரது மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பரோல் காலத்தை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்க உத்தரவிட்டது. தற்போது, மீண்டும் தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால், பரோல் காலத்தை நீட்டிக்க மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *