• September 18, 2019
0 Comments

கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பியதால், மேட்டூர் அணைக்கு கடந்த 7-ந்தேதி முதல் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 68 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் 59 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *