• September 18, 2019
0 Comments

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை வழக்கம்போல் திடீரென கருமேக கூட்டங்கள் திரண்டு லேசாக பெய்யத் தொடங்கிய மழை, அதன் பின் பலத்த இடி மின்னலுடன் பெய்தது. மாவட்டம் முழுவதும் விடாமல் பலத்த மழை பெய்தது. மேலும் சில இடங்களில் 2 மணி நேரம் வரை கன மழை பெய்தது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், பவானி நகரில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கவுந்தப்பாடி, எலந்த குட்டைமேடு, அம்மாபேட்டை, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கொடுமுடி என மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *