• September 19, 2019
0 Comments

ராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதியில் உள்ள கடல்நீரானது நேற்று நிறம் மாறி, பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறி, பாசி படர்ந்த நீர் போல காட்சியளித்தது. மேலும், கிளி, ஒரா, காரல், விலாங்கு போன்ற பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கியதால், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுபாம்பன் குந்துகாலுக்கு சென்று பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டு, அதனை டப்பாக்களில் சேகரித்துக்கொண்டு, இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். இதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில், ” ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் பாம்பன் கடல்தண்ணீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன. இந்த மாற்றமானது, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை ” என்று கூறினர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *