• September 19, 2019
0 Comments

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்
தேங்காய் பால் – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
முட்டை – 1

செய்முறை:

கோதுமை மாவை சலித்து முட்டை, தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அத்துடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வைத்து வடிகட்டி வைக்கவும்.

இந்த மாவை ஒரு விரும்பிய மாடலில் கோனில் ஊற்றி கொள்ளவும்.

நான் ஸ்டிக் பேனில் பட்டர் அல்லது நெய் தடவி விரும்பிய கோனில் வைத்து ஊற்றி விடவும்.

சுவையான ஜாலர் தோசை ரெடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *