• September 19, 2019
0 Comments

தேவையான பொருட்கள் :

காளான் – 20,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 2 கப்,
மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் – 1 கப்,
வெங்காயம் – 1,
பூண்டு – 6 பல்,
பொடியாக நறுக்கிய செலரி – கால் கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – சிறிதளவு ,
சில்லி சாஸ் – கால் டீஸ்பூன்,
சோயா சாஸ் – 4 துளிகள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

காளானை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காளான், பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

கடைசியாக செலரி இலையை தூவிப் பரிமாறவும்.

சத்தான மஷ்ரூம் பேபி கான் சூப் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *