• September 19, 2019
0 Comments

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்கள் மீதும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *