• September 18, 2019
0 Comments

ஊட்டி,

ஊட்டியில் குடும்ப வறுமை காரணமாக தாயும், மகளும் துப்பட்டாவால் கட்டியபடி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (25). இவரது கணவர் மலர்வணன் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு ஹரிதா(5) என்ற மகள் உள்ளார். நிர்மலா தினமும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், இதில் போதிய வருமானம் இல்லை என்று தெரிகிறது.

மேலும் ஹரிதா தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தா நிலையில், எதிர்காலத்தில் பெண் குழந்தையை எப்படி படிக்க வைப்பது என்பதை நினைத்து நிர்மலா மன வருத்தத்தில் இருந்த நிர்மலா நேற்று முன்தினம் இரவு மகள் ஹரிதாவை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் ஏரியில் பிணங்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த படகு இல்ல ஊழியர்கள் ஊட்டி நகர மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணையில், குடும்ப வறுமை காரணமாக நிர்மலா தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *