• September 19, 2019
0 Comments

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். டிரம்ப் – அர்னால்டு இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இருபினும் டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்டு கடுமையாக விமர்சித்தார்.

அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார். பிரபல இதழ் ஒன்று அண்மையில் அர்னால்டிடம் பேட்டி கண்டது. அப்போது அவரிடம், “உங்களுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான பகைமையின் காரணம் என்ன?  என்று கேட்கப்பட்டது. அதற்கு அர்னால்டு “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார்.

அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் ஜனாதிபதியை பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *