• September 19, 2019
0 Comments

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும்,  தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு எங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டி.என்.இ.ஆர்.சி.) செயல்படுகிறது. ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்த ஆண்டு டான்ஜெட்கோ மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நிதி நெருக்கடி நீடித்து வந்தாலும், அதை மக்களை நோக்கித் திருப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை.

நிதி நெருக்கடி இருந்தாலும், இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது. முதல்-அமைச்சர் தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் இதுபற்றி கலந்து பேச வேண்டியதுள்ளது. மின்சார கட்டமைப்புகளுக்கு கஜா புயல் செய்த பாதிப்புகளுக்கு மட்டுமே ரூ.2,500 கோடியை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. சம்பள கமிஷனின் பரிந்துரைகளை அமலாக்குவதில் ரூ.1,200 கோடி கூடுதல் செலவு செய்தோம். மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யுனிட் ஒன்றுக்கு ரூ.0.44 உயர்ந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *