• September 19, 2019
0 Comments

சோமாலியா நாட்டில் அரசுப் படையினருக்கும், அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்களுக்கும் இடையே அவ்வபோது தாக்குதல் நடக்கும். இந்நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில்  உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற வந்த  அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையில் சில மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகளும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாக சோமாலியா ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *