• September 18, 2019
0 Comments

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர், தொண்டப்பாடி, பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தங்களது வயல்களில் வரப்பு கரை அமைக்க பலமுறை மனு கொடுத்தும் பணியாணை கொடுக்காததை கண்டித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்) செல்வமணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டும் குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிதியாண்டில் வேலைகள் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *