• September 18, 2019
0 Comments

திருச்சிராப்பள்ளி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (40). அந்தப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த இவர், துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அவர் கடந்த மாதம் 21-ந் தேதி காலை முருகேசனிடம் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முருகேசன் அன்றைய தினம் காலை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நவல்பட்டு போலீசார் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நவல்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *