• September 18, 2019
0 Comments

நாகப்பட்டினம்

இந்தியாவில் பொருளாதார பாதிப்பு இல்லை எனவும், மோடி இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறார் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜ தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். அவர் கூறுவது போல் எந்த கேள்வியும் அதில் இல்லை. இந்தியாவில் பொருளாதார பாதிப்பு என்பது நேருவின் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து கருப்பு பணம் உள்பட வெளியில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டது. அதைக் கொண்டு தான் சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்போது எந்த பொருளாதார பாதிப்பும் இந்தியாவில் ஏற்படவில்லை. பிரதமர் மோடி இந்தியாவை பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் கொண்டு செல்கிறார். எதிர்க்கட்சியினர் இதை தவறான நோக்கத்துடன்  விமர்சிப்பதோடு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *